2024 மே 25, சனிக்கிழமை

சச்சினுக்கு விருது கிடைப்பதில் சர்ச்சை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலிய நாட்டின் உயர் விருதான 'ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா' என்ற விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவருக்கு அந்த விருது கிடைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இந்த சர்ச்சையைக் கிளப்பி அந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்குவதையிட்டு தனது ஆசேபணையையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவுஸ்திரேலிய உறுப்பினரான ரொப் ஓக் ஷாட் கருத்து தெரிவிக்கையில், 'எனக்கு சச்சின் டெண்டுல்கர் மீதும், கிரிக்கெட் மீதும் அன்பு இருக்கிறது. ஆனால், அவுஸ்திரேலியாவின் உயர் விருதை அரசியல் காரணங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது' என்று கூறியுள்ளார்.

தனது ஆட்சேபணையை ஒரு கட்டத்துக்கு மேல் வலியுறுத்த விரும்பவில்லை என்றும் கருத்து வெளியிட்டுள்ள ரொப், இந்த விருது அவுஸ்திரேலியர்களுக்கே உரித்தானதாக இருப்பதே சிறப்பு என்றும் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் நாடுகளுக்கிடைப்பட்ட நட்புறவு தொடர்பில் இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ள ரொப், வேண்டுமானால் 'அவுஸ்திரேலியா - இந்தியா விருது'  என்ற விருது ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். (இந்திய செய்தி ஊடகம்)

You May Also Like

  Comments - 0

  • sarath Thursday, 18 October 2012 04:48 AM

    செய்யவும் மாட்டார்கள், செய்கிறவர்களை விடவும் மாட்டார்கள்...

    Reply : 0       0

    SIVA Friday, 19 October 2012 10:58 AM

    ரொப் ஓக் ஷாட் கருத்து சரி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .