2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பிடல் கஸ்ட்ரோவுக்கு பக்கவாதம் இல்லை: சகோதரி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத்தை ஏற்படுத்தும் பக்கவாத நோயால் பிடெல் கஸ்ட்ரோ பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என அவரது சகோதரி ஜுவனிதா கஸ்ட்ரோ கூறியுள்ளார்.

புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியுமான பிடெல் காஸ்ட்ரோ (வயது 86)விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆட்சிப் பொறுப்பை சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

கஸ்ட்ரோ பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும் பேச முடியாத நிலையில் கஸ்ட்ரோ உள்ளார் எனவும் அவரை கண்காணித்து வருகின்ற வைத்தியர் ஜோஸ் மார்க்குயினா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த தகவலை கஸ்ட்ரோவின் சகோதரியும், அவருடைய மகனும் மறுத்துள்ளனர். வெனிசுலா நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜுவனிதா கஸ்ட்ரோ, இச்செய்தியில் உண்மையில்லை என கூறியுள்ளார்.

உடல்நலக்குறைவினால் 2008ஆம் ஆண்டு கஸ்ட்ரோ பதவி விலகிய பின்னர், இன்று வரை இவரது சகோதரர் ராவுல் கஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதியாக பதவியில் உள்ளார்.

இந்நிலையில் கியூபாவிலும் அமெரிக்காவிலும் கஸ்ட்ரோ இறந்து விட்டார் என்றும் கோமா நிலைக்கு சென்று விட்டார் எனவும் சில பத்திரிக்கைகள் பல மாதங்களாக செய்திகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .