2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்கின் பட்டங்கள் பறிப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் சைக்கிளோட்டச் சம்பியன்களில் முக்கியமானவர் எனக் கருதப்பட்ட லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்கின் 7 "ருவர் டீ பிரான்ஸ்" சம்பியன் பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளதோடு, அவர் வாழ்நாள் முழுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவின் ஊக்கமருந்துத் தடுப்புப் பிரிவு வழங்கிய தண்டனையே சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சைக்கிளோட்டத்திற்காக ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தி வந்தார், அவற்றின் மூலம் உலகின் புகழ்பெற்ற "ருவர் டீ பிரான்ஸ்" தொடரின் 7 சம்பியன் பட்டங்களைப் பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்கின் பட்டங்கள் பறிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஐக்கிய அமெரிக்காவின் ஊக்கமருந்துத் தடுப்புப் பிரிவின் தண்டனைகளை ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கெதிராக விளையாட்டுக்கான நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதில்லை எனவும் சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. அத்தோடு சைக்கிளோட்டத்தில் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்கிற்கு இடமேதும் இல்லை எனவும் சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் ஊக்கமருந்துத் தடுப்புப் பிரிவு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை என ஏற்கனவே லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .