2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' நாயகி மஞ்சள் காமாலையினால் மரணம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா, மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துள்ளார். 

பெங்களூரைச் சேர்ந்த இவர், மிஸ் பெங்கராகவும் தெரிவி செய்யப்பட்டவராவார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.

 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு திரைப்படங்கள் அமையாததால் தெலுங்கு பக்கம் போய், அங்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து நேற்று இரவு அவர் திடீரென மரணமடைந்துள்ளார். (மாலைமலர்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .