2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

விண்வெளி ஆராய்ச்சி அனுபவம் விலைமதிப்பற்றது: சுனிதா

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதையும், விண்வெளியில் மிதப்பதையும் நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த அனுபவம் விலை மதிப்பற்றது' என்று சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்றுள்ள 33ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், இந்த பயணத்தின் 100ஆவது நிறைவு நாளை முன்னிட்டு அங்கிருந்தபடியே வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதன்போது அவர் கூறியுள்ளதாவது,

'விண்வெளியில் மிதந்த படியே வாழும் இந்த அனுபவத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். இதே மனநிலை எனக்கு எப்போதும் இருக்குமா? என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது.

எனவே, இந்த விண்வெளி பயணத்தின் போதே எவ்வளவு பறக்க முடியுமோ, எவ்வளவு மிதக்க முடியுமோ, அதையெல்லாம் முழுமையாக அனுபவித்துவிட நான் ஆசைப்படுகிறேன்.

விண்வெளியை விட்டு பூமிக்கு திரும்பிய பின்னர், புவி ஈர்ப்பு தன்மையற்ற நிலையில் அந்தரத்தில் மிதந்தபடியே, நம் வாயில் வந்து விழும் பொருட்களை சுவைத்து மகிழ முடியாது.

நம் வீட்டைப் போன்ற சுகமான, நிம்மதியான இடம் உலகத்தில் வேறெங்கும் கிடையாது. விண்வெளியில் வீட்டின் சுகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்தில், தலையணை இல்லாமல், உடலை நீட்டி படுக்க முடியாமல், தூங்குவது சிரமமாகதான் இருந்தது.
இப்போது, இதுவே பழகிப் போய் விட்டது.

இந்த நேரத்தில், நாங்கள் தங்கியுள்ள இடம்தான் எங்களுக்கு வீடாக உள்ளது. நாங்கள் பயன்படுத்திய பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக் கிடக்கின்றன.

ஆனால், எந்த பொருள் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அடுத்த குழு இங்கு வருவதற்குள் நாங்கள் இந்த இடத்தை சுத்தம் செய்து விட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .