2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட இம்ரான் கானிடம் அதிகாரிகள் விசாரணை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் சுமார் ஒரு மணித்தியாலம் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து நியூயோர்க் நகருக்கு விமானத்தில் புறப்படவிருந்த போதே இம்ரான் கான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது கட்சி வளர்ச்சிக்கான நிதி திரட்ட லாங் ஐலன்ட்சிட்டி நகரில் நடைபெறும் விருந்துபசாரம் மற்றும் சொற்பொழிவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

டொரண்டோவில், நியூயோர்க் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் திடீரென கீழே இறக்கினர். பின்னர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளிடம் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த வசிகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இம்ரான்கான் அண்மையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பில் அவரிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகின்றது.

தீவிரவாதிகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை எதிர்ப்பது ஏன்? நீங்கள் தலிபான்களை ஆதரிக்கிறீர்களா? போன்ற கேள்விகளை அவ்வதிகாரிகள் தன்னிடம் கேட்டதாக இம்ரான் கான் தனது டுவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அமெரிக்கா தன்னிச்சையாக தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அது மிகப் பெரிய குற்றம், மேலும் அது பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது. எனவே அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து எதிர்ப்பேன் எனவும் அவர் தனது டுவிட்ட வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .