2024 மே 25, சனிக்கிழமை

சச்சினுக்கு 'ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா' விருது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 06 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருதான 'ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருதான 'ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா' விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இதற்கு அந்நாட்டு எம்.பி. ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் சச்சின் டெண்டுல்கருக்கு இவ்விருதை வழங்குவதா இல்லையா என்ற சர்ச்சை நிலவியது.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று அந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது அவுஸ்திரேலிய அமைச்சரான சிமோன் க்ரியன் இந்த விருதை சச்சினுக்கு வழங்கி கௌரவித்தார்.

இதன்மூலம் அவுஸ்திரேலியாவின் இந்த உயரிய விருது பெறும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் முன்னாள் சட்டமா அதிபர் சோலி சொராப்ஜிக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .