2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் காலமானார்

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் இன்று சனிக்கிழமை மாலை காலமானார். 
 
மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினையால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை முடிந்து கடந்த 19ஆம் திகதியன்றுதான் வீடு திரும்பினார்.
 
இந்நிலையில் வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலாமானார். இறக்கும்போது அவருக்கு வயது 91.

You May Also Like

  Comments - 0

  • அமிர்தன் Saturday, 25 May 2013 04:41 PM

    ஜயா உங்கள் பாட்டை கேட்டு இரசிப்பது மாத்திரம் அல்ல, உங்கள் தமிழ் உச்சரிப்பில் நாங்கள் தமிழ் படித்தோம். உங்களைப்போல் வேறு பாடகா் இனி பிறந்தும் வரமுடியாது. உங்கள் பாடல்கள் இன்றைக்கல்ல அவை என்றும் வாழும். எம் இதய வணக்கம்...

    Reply : 0       0

    aizaad Sunday, 26 May 2013 04:30 AM

    1960களின் கணீர்க் குரலோன். இன்றும் அவரது பாடல்கள் ரச மோட்சம் கொண்டவையாகவே உள்ளன.

    Reply : 0       0

    YARL SIVA Sunday, 26 May 2013 10:38 PM

    T.M.S மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்!

    Reply : 0       0

    abdus Tuesday, 28 May 2013 02:56 PM

    உம்மை வர்ணிக்க வார்த்தை இல்லை, உனக்கு நிகர் நீ தான்...

    Reply : 0       0

    amr Wednesday, 29 May 2013 04:06 AM

    நீ செம்மைக்குரலோன் - சந்தேகமில்லை - ஆயினும் தான் என்ற மமதையை தலைக்கனமாய் சூடி இருந்தாயே - அடங்கியதா? உன் ஆணவம் இன்று. இதுதான் யதார்த்தம் - மனிதா புரிகிறதா உனக்கு?

    Reply : 0       0

    Mfls Wednesday, 05 June 2013 03:35 AM

    'மறைவு' என்பதற்கு மறு பொருள் இறையடி சேர்வதென்பதாகும், அவன் பிடியில் இருப்பவனின் குறை நிறை நன்மை தீமைகளை அறிந்தவன் அவன் மாத்திரமே ஆவான். எனவே இப்பூவுலகில் வாழும் நற்பண்பு படைத்த மானிடனின் கடமை மறைந்தவனுக்கு பிரார்த்தனை புரிவதாகும். இப் பண்பை மறந்தவன் இவுலகில் வாழ்வதற்கு தகுதியற்ற இழிவானவனாவான் மற்றும் இறையடி சேர்த்தவனை சபிப்பவனின் அல்லது தூற்றுபவனின் மறைவும் இழிவானதாகவே அமையும் என்பது தான் யதார்த்தம். இதை நீ உணர்வாய் மனிதா !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X