2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விதவிதமான உடைகளில் அசத்தும் மோடி

Kanagaraj   / 2014 மே 27 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய அரசியல் தலைவர்களில் விதவிமான உடைகளை அணிந்து அசத்தும் அரசியல் தலைவர் யார் என்று கேட்டால், அனைவரும் நரேந்திர மோடி என்றுதான் சொல்வார்கள்.

அந்தளவுக்கு, சரியான அளவில், வடிவமைப்பில் உடைகள் அணிய வேண்டும் என்பதில் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.

''கண்கள், குரல், உடைகள் இந்த மூன்றிலும் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று ஒரு முறை மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி அனைவரையும் கவரும் விதத்தில் விதவிதமாக உடுத்துவதில் ஆர்வம் காட்டும் நரேந்திர மோடிக்கான உடைகளை அகமதாபாத்தை சேர்ந்த பிபின், ஜிதேந்திரா சவுகான் என்பவர்கள் வடிவமைத்து தருகிறார்கள்.

இன்று, நேற்றல்ல கடந்த 25 ஆண்டுகளாக மோடிக்கு இவர்கள்தான் உடைகளை வடிவமைத்து தருகிறார்கள்.


ஒரு நாளில் எத்தனை விழாக்கள், நிகழ்ச்சிகள் என்றாலும் அத்தனைக்கும் விதவிதமான உடைகள்தான் மோடி அணிவார். மோடிக்கு கதர், லினன், பகல்பூர் பட்டுத்துணிகளில் உடைகள் வடிவமைத்து அணிவதில்தான் கொள்ளை ஆசை.

மோடியின் அடையாள உடை அரைக்கை குர்தா, சுடிதார். துறவிபோல சுற்றித்திரிந்த காலத்தில் கையில் ஒரு துணிப்பையைத்தான் மோடி எடுத்துச்செல்வார். அதில் அரைக்கை குர்தாக்கள் என்றால் கூடுதலான எண்ணிக்கையில் வைக்கலாம் என்பதாலும், அவரே உடைகளை சலவை செய்து வந்ததால் சலவைக்கும் எளிது என்பதாலும் அரைக்கை குர்தாக்களை விரும்பி அணிய ஆரம்பித்தார்.

இப்போது இந்த 'மோடி குர்தா' பேஷனாகி விட்டதாம். இந்த பிபின், ஜிதேந்திரா சவுகான் சகோதரர்கள் மோடியின் அனுமதியுடன் மோடி குர்தா என்ற பெயரில் வடிவமைத்து வியாபாரம் பட்டையை கிளப்புகிறதாம். இப்போது அவர் பிரதமராகி விட்டதால் அதன் விற்பனை இரு மடங்காகி விடும் என எதிர்பார்க்கிறார்கள்.

தனக்கு தேவையான அங்க வஸ்திரங்களை அவரே தனிப்பட்ட முறையில் இன்றைக்கும் தேர்வு செய்வாராம். ஆரம்ப காலத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்தாக்களில் ஆர்வம் காட்டிய மோடி இப்போது ஆர்வம் காட்டுவது சாதாரண குர்தா.

பெரும்பாலும் காவி, வெள்ளை நிற குர்தாக்களை அணிந்து வந்த மோடி இப்போதுதான் பிற நிற குர்தாக்களையும் விரும்பி அணிகிறார். எத்தனை பரபரப்புக்கு மத்தியிலும் மோடி தான் அணிகிற உடையின் நிறம், துணி, வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் அக்கறை செலுத்த தவறுவதே இல்லையாம்!


You May Also Like

  Comments - 0

  • karmel Wednesday, 11 June 2014 05:33 PM

    ஒரு ரசனை உள்ள மனிதர். அதுபோல இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டுகிறேன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .