2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சச்சினின் சுயசரிதைப் புத்தகம்

A.P.Mathan   / 2014 நவம்பர் 06 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக சேர் டொனால்ட் பிரட்மனுக்கு பின்னர் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது சுயசரிதைப் புத்தகத்தை நேற்று வெளியிட்டு இருந்தார். தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று ஒரு வருடத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நேற்று மும்பையில் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். "பிளேயிங் இட் மை வேய்" என பெயரிடப்பட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. என் பாதையில் இதை விளையாடுகிறேன்" என்ற பெயரிலேயே இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. முதற் பிரதியை சச்சின் தனது தாயாருக்கு வழங்கி வைத்தார். தனது தமையன் அஜித்துக்கும் இந்த புத்தகத்தை வழங்கிய சச்சின், தனது வாழ்கையில் அஜித் மற்றும் அஞ்சலி ஆகியோரும் முக்கிய பங்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இந்த நிகழ்வில் சச்சினின் மனைவி அஞ்சலி, தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விடயங்களை பகிர்ந்துகொண்டமை மிகுந்த சுவாரசியத்தை வழங்கி இருந்தது. 
 
இந்தப் புத்தத்தில் கிரேக் சப்பல் தொடர்பான கருத்துகளை சச்சின் வெளியிட்டுள்ளார். டிராவிட் இடம் இருந்து அணித்தலைமைப் பொறுப்பை எடுக்குமாறும், தாங்கள் இருவரும் இணைந்து இந்திய கிரிக்கெட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும் என கேட்டுக் கொண்டதாக எழுதியுள்ளார். அதேவேளை அவர் சேர்க்கஸ் போட்டிகளை நடத்துபவர் போல வீரர்களின் கருத்துகளை கேளாமல், அவர்களின் திறமைகளை கணக்கெடுக்காமல் வீரர்களை தன் விருப்பப்படி விளையாட வைத்தார் எனவும் எழுதியுள்ளார். இந்த கருத்துக்களுக்கு தமது ஆதரவு கருத்துகளை சகீர் கான், லக்ஸ்மன் போன்றவர்கள் ஏற்கெனவே கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 
அத்துடன் 2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வைத்து சைமண்ட்ஸ் - ஹர்பஜன் சிங் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சர்ச்சை தொடர்பாகவும் எழுதியுள்ளார். போட்டி மத்தியஸ்தர் ஹர்பஜனை பொய்யாளன் என அழைத்ததாகவும் தனக்கு அது மிகக் கோபத்தை ஏற்படுத்திய விடயம் என கூறியுள்ள அவர், ஒரு வீரரை அவ்வாறு அழைப்பது மிகப்பெரிய விடயம் எனவும் கூறியுள்ளார். அந்த போட்டியில் மோசமான தீர்ப்புக்கள் மற்றும் அவுஸ்திரேலியா வீரர்களின் மோசமான கனவான் தன்மை அற்ற நடத்தைகள் இந்திய அணிக்கு தோல்வியை தந்ததாக அவர் எழுதியுள்ளார். அத்துடன் ஹர்பஜன், சைமைண்ட்சை குரங்கு என அழைக்கவில்லை எனவும் அவுஸ்திரேலியா வீரர்கள் தங்கள் மீது அவதூறாக நடந்து கொண்டு இவ்வாறான முறையீட்டை செய்ததாகவும் இந்த சர்ச்சையினை அடுத்து குறித்த தொடரில் இருந்த விலகி தங்கள் எதிர்ப்பை காட்ட இந்திய அணி முனைந்ததாகவும் சச்சின் மேலும் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .