2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

மீசை முருகேசன் காலமானார்

George   / 2014 நவம்பர் 09 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் தனது 85ஆவது வயதில் காலமானார். இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சனிக்கிழமை(08) மாலை உயிரிழந்தார்.

ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் தவில் கலைஞராக பணியாற்றினார். மோர்சிங் வாசிப்பதில் வல்லவராக இருந்தார். பல்வேறு இசை ஒலிகளையும் எழுப்புவார்.

திருமால் பெருமை உள்ளிட்ட பழைய திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டினார். மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக திரைப்படத்தில் தான் முழு நடிகரானார்.

விஜயுடன் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். விஜயகாந்துடன் பெரியண்ணா திரைப்படத்தில் நடித்தார். கடைசியாக சேரனுடன் பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.

மரணம் அடைந்த மீசை முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும் ஜோதி குமார், நாகராஜன் என்ற மகன்களும், சரஸ்வதி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர்.

அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X