2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

உலக கட்டழகியானார் பூமிகா

Kogilavani   / 2017 ஜூன் 27 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான உலக கட்டழகி பட்டத்தை, இந்தியாவின் பூமிகா சர்மா கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் உலக கட்டழகி போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை, அவர் பெற்றுக்கொண்டுள்ளார். 

பெண்களுக்கான உலக கட்டழகி போட்டி,  வெனிஸ் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், உலகம் முழுவதிலுமிருந்து, 50 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் 27ஆவது இடத்தில்  இந்தியாவின் பூமிகா ஷர்மா இருந்தார். இவர் மற்ற போட்டியாளர்களைவிடவும் அனைத்து சுற்றுகளிலும் அதிக புள்ளிகளை பெற்றதால், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

பூமிகா ஷர்மாவின் தாய் ஹன்சா மன்ரல் ஷர்மா, மகளிர் பளுத்தூக்குதல் பயிற்சியாளராக, உள்ளார். முதலில் பூமிகா, துப்பாக்கி சுடுதல் பிரிவைதான் தெரிவு செய்துள்ளாராம். ஆனால், எழுச்சியூட்டும் ஒரு பயிற்சியாளரை பார்த்தப்பின், அவர் தனக்கான பாதையாக உடல் கட்டழகி பிரிவை தெரிவு செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூமிகா, உடல் கட்டழகி பிரிவை தெரிவு செய்ததை, முதலில் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லையாம்.  ஆனால், குடும்பத்தாரை சம்மதிக்க வைத்து, இப்பிரிவுக்குள் அவர் நுழைந்துள்ளார்.

பூமிகா தனது பயிற்றுவிப்பளார் பூபேந்திர ஷர்மாவின் அறிவுரைப்படி,  ஒரு நாளைக்கு 7 மணி நேரம் உடல் கட்டழகி பயிற்சி செய்வாராம். நடந்து முடிந்த உலக கட்டழகருக்கான அனைத்துப் பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று, பூமிகா ஷர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

உலக கட்டழகி  பட்டத்தை கைப்பற்றியுள்ள பூமிகாவுக்கு 21 வயதுதான் ஆகிறது. இவர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள கட்டழகிக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X