Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மே 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியொன்று தமது புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்து சென்றவேளை அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 50 லட்சம் ரூபா) இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், அதை அவர்கள் சொந்தமாக்கி கொள்ளாமல் உரியவர்களை தேடிச் சென்று ஒப்படைத்துள்ளனர்.
ஜோஸ் பெரின் என்பவரது குடும்பம் அமெரிக்காவின் சோல்ட் லேக் சிட்டியில் அண்மையில் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தது.
அந்த வீட்டில் கராஜ் பகுதிக்கு சென்ற ஜோஸ் பெரின் அங்கு சுவரின்மேல் கூடுபோன்ற ஒரு பொருளிலிருந்து துணித்துண்டொன்று தொங்குவதை அவதானித்தார். அதையடுத்து அவர் கதவை திறந்து ஏணியின் மூலம் ஏறி பார்த்தபோது பழைய பெட்டியொன்று தென்பட்டது.
அது இரண்டாம் உலக யுத்த காலத்தில் குண்டுகள் வைக்க பயன்படுத்தப்படும் பெட்டியை போன்று இருந்தது. அதை திறந்த பார்த்த பெரினுக்கு பெரும் அதிர்ச்சி. அந்த பெட்டியில் ஆயிரக்கணக்கான டொலர் பணம் இருந்தது.
'நான் திகைப்படைந்து அப்பெட்டியை எனது காருக்குள் கொண்டுவந்து வைத்தேன். பின்பு எனது மனைவியை அழைத்து அவள் இலகுவில் நம்பமாட்டாத நான் கண்ட செல்வம் குறித்து கூறினேன்' என்கிறார் பெரின்.
பின்னர் அதேபோல் 7 பெட்டிகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த பெட்டிகள் அனைத்தும் பணத்தினால் நிரப்பப்பட்டு காணப்பட்டது.
பெரின் தனது மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டும் விரைவாக அந்தப் பணப் பெட்டிகளை தனது பெற்றோரின் வீட்டிற்கு எடுத்துச் சென்று எண்ணுவதற்கு ஆரம்பித்தார். வீட்டிலிருந்த ஏனையவர்களும் பணத்தை எண்ண ஆரம்பித்னர்.
40,000 டொலர்கள் எண்ணி முடித்து பின் அப்பணத்தை எண்ணுவதை அவர்கள் நிறுத்தினர். மேலும் 5 ஆயிரம் டொலர்களாவது அதில் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
இந்த பணத்தைக் கொண்டு தனது வாழ்கையின் கஷ்டங்களை போக்கிக் கொள்வதாக அல்லது உரியவரை தேடிச் சென்று கொடுப்பதா என்ற யோசனை பெரினுக்குத் தோன்றியதாம்.
'நான் துல்லியமாக இருக்கவில்லை. அப்பணத்தை நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையிலுள்ள கார், திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடு, குழந்தையொன்றை தத்தெடுப்பது பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை என்றும் அர்த்தமில்லை.
அந்த பணம் எம்முடையது அல்ல. பரிகசிக்கத்தக்களவு நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அடிக்கடி வாய்ப்பு வராது என்பது எனக்குத் தெரியும். எனது பிள்ளைகளுக்கு நேர்மை குறித்து பாடம் கற்பிக்கவும் நான் விரும்பினேன். அதனால் இப்பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தேன்' என பெரின் கூறியுள்ளார்.
அவ்வீட்டின் முன்னாள் உரிமையாளரான ஆர்னோல்ட் பங்கேர்ட்டர் என்பவரின் பணமாக இது இருக்கலாம் என பெரின் ஊகித்தார்.
இந்த வீட்டில் 1966 ஆம் ஆண்டு முதல் அவ்வீட்டில் தனது மனைவியுடன் வசித்த ஆர்னோல்ட் பங்கேர்ட்டர் 2005 ஆம் ஆண்டில் காலமாகியிருந்தார். அதனால் பங்கேர்ட்டரின் பிள்ளைகளில் ஒருவரான கே பங்கேட்டரை தொலைபேசியில் அழைத்து விடயத்தை கூறி பணத்தை ஒப்படைத்தார் ஜோஸ் பெரின். இது கே பங்கேர்ட்டருக்கு நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
'எனது தந்தை பணத்தை ஒளித்து வைப்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை பணத்தை ஒளித்து வைத்திருப்பார் என எதிர்பார்க்கவில்லை' என கே பங்கேர்ட்டர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago