Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகவும் குள்ளமான நபரான கஜேந்திரா தாபா மாகர், உலகிலேயே மிகவும் பெரிய புஜத் தசைகளைக் கொண்ட மனிதரான டினி ஐரோனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார்.
22 அங்குலம் மாத்திரம் உயரமான கஜேந்திரா தாபா மாகர், இன்னும் சில வாரங்களில் 18 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளார்.
உலகில் இவர்தான் மிகக் குள்ளமான பதின்மர் பருவ நபர் . ஆனால் 18 வயது பூர்த்தியானவர்களே குள்ளமான நபர் விடயத்தில் கருத்திற்கொள்ளப்படுவர் என கின்னஸ் சாதனை நூல்வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதியே அவர் உலகில் மிகவும் குள்ளமான மனிதர் என்ற அங்கீகாரத்தைப் பெறவுள்ளார்.
உடற்கட்டழகரான டினி ஐரோனின் கைகளின் முன்புற புஜத்தசை (பைசெப்ஸ்) அளவு 24 அங்குலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது கஜேந்திரா தாபா மாகரின் உயரத்தைவிட இரண்டு அங்குலம் அதிகமாகும்.
அண்மையில், கஜேந்திர மாகர் டினி ஐரோனுடன் லண்டனில் வைத்து புகைப்படம் பிடித்துக்கொண்டார்.
28 வயதான லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட ஐரோன், பிரிட்டனில் மிகப்பெரிய புஜத்தசை கொண்டவராகக் கருதப்படுகிறார்.
அண்மையில் உலகின் மிகக் குள்ளமான நபராக கொலம்பியாவைச் சேர்ந்த 24 வயதான எட்வர்ட் நினோ ஹெரொண்டஸ் கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டார்.
அவரது உயரம் 27 அங்குலமாகும்.
இந்நிலையில், கஜேந்திரா மாகர் சில வாரங்களில் உலகில் மிகவும் குள்ளமான நபராக அங்கீகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
40 minute ago
46 minute ago
2 hours ago