2025 மே 15, வியாழக்கிழமை

பரபரப்பாக விற்பனையாகும் எதுவும் எழுதப்படாத 'செக்ஸ் புத்தகம்'

Kogilavani   / 2011 மார்ச் 06 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

200 பக்கங்களைக் கொண்ட செக்ஸ் புத்தகமொன்று பிரிட்டனில் பரபரப்பாக விற்பனையாகி அதிகம் விற்பனையான புத்தகமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த புத்தகத்தில் எதுவுமே எழுதப்படவில்லை,  அனைத்து பக்கங்களும் வெறுமையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மனிதனும் செக்ஸ் தவிர வேறு எதைப்பற்றி சிந்திக்கிறான் ('What Every Man Thinks About Apart From Sex') என இந்தப் புத்தகத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

செறிடன் சிமோவ் என்பவர் வெளியிட்ட 200 பக்கங்களைக்கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை 4.69 ஸ்ரேலிங் பவுண்களாகும் (சுமார் 842 இலங்கை ரூபா)  பிரிட்டனிலுள்ள மாணவர் ஒன்றியங்களின்  ஊக்குவிப்பு கிடைத்துள்ளதால் இந்த புத்தகம் அமேஸான் இணையத்தளத்தில் ஏற்கெனவே விற்று முடிக்கப்பட்டுள்ளது.

இதனை மாணவர்கள் பலர் குறிப்புப் புத்தகமாக பயன்படுத்துகின்றனர்.

நோட்டிங்காம் பல்கலைகழகத்தின் மாணவன் ஜெஸ் லொயிட் தெரிவிக்கையில்,  'அந்த புத்தகத்தின் ஒரு பிரதியை வேடிக்கைக்காக  நண்பருக்காக வாங்கிக் கொடுத்தேன்.  அவர் அதனை  தனது குறிப்பு புத்தகமாக பாவிப்பதற்கு ஆரம்பித்தார.  தற்போது ஒவ்வொருவரது கைகளிலும் அதனை குறிப்புப் புத்தமாக காண முடியும். இது உண்மையில் பல்கலைகழகத்தில் ஒவ்வொருவரிடமும் அளவுக் கடந்த ஆசையை தூண்டியுள்ளது' என்றார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பட்டதாரியான சிமோவ் (வயது 39) இது பற்றி கூறுகையில்,  'எனது புத்தகத்தை பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது குறிப்புப் புத்தகமாக பயன்படுத்துவார்கள் என்று நான் ஒருபோதும்,  நினைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

'ஒருவகையில் பார்த்தால் எனது புத்தகத்தில் ஏதாவது உள்ளடக்குவதன் மூலம் எனது  கருத்து பிழையென நிரூபிக்கின்றனர். ஆனால் அவர்களில் எத்தனை பேர் விரிவுரை முடிந்தபின் செக்ஸ் பற்றி எண்ணுவார்கள்  என்று யோசிக்கிறேன். அந்த கேள்விக்கு பதில் 100 வீதம் என்று நான் பந்தயம் கட்டுவதற்குத் தயார்' என்கிறார் சிமோவ்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 07 March 2011 09:16 PM

    சுத்தம்! சுத்தமாக ஒன்றுமே விளங்கவில்லை என்ன சொல்கிறார்கள் என்று? மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்ன இது என்று!

    Reply : 0       0

    xlntgson Wednesday, 09 March 2011 09:00 PM

    சிந்தித்து பார்த்து முடிவுக்கு வந்து விட்டேன், இது கிறுக்குப் புத்தகம், இவர்கள் அதில் கிறுக்குவார்கள்! செக்ஸ் கிறுக்கர்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .