Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 07 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் கால்பந்தாட்டத்தை பார்ப்பதற்காக சென்ற ரசிகர்கள் மழை வெள்ளத்தில் நிறைந்த விளையாட்டரங்கில் நீந்திச் சென்ற சம்பவம் கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சா போலோ நகரிலுள்ள மோரம்பி அரங்கம் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியது. ஆசன வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளுக்கு ஊடாக இந்த இரசிகர்கள் நீந்தி வெளியேறினர்.
80,000 பேரை உள்ளடக்க கூடிய இந்த அரங்கில் கடும் மழைக்கு மத்தியிலும் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்கள் திரண்டனர்.
சா போலோ மற்றும் பல்மைராஸ் கழகங்களுக்கிடையிலான இப்போட்டி திட்டமிட்டபடி நடத்த மத்தியஸ்தர் தீர்மானித்தார். ஒரு மணித்தியால தாமதத்தின் பின்னர் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
மழை காரணமாக இப்போட்டி 15 நிமிடம் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி நிறைவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago