2025 மே 15, வியாழக்கிழமை

வானொலி நேயர்களுக்கான பரிசாக மரணச் சடங்கு செலவுத்தொகை

Kogilavani   / 2011 மார்ச் 09 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியிலுள்ள வானொலி நிலையமொன்று ரசிகர்களுக்கான போட்டியொன்றில் வெல்பவர்களுக்கு அவர்களின் மரணச் சடங்குகளுக்கான செலவுத் தொகையை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

வானொலி நேயர்கள் அவர்களது இறப்பின் பின்னர் சமாதியில் பொறிப்பதற்கான கல்லறை வாசகத்தை வானொலி நிலையத்திற்கு எழுதி அனுப்ப வேண்டும் என கலெக்ஸி எனும் வானொலி நிலையம் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்காக 600 இற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

இது மோசமான ரசணை கொண்ட அபத்தமான போட்டி என பலர் தெரிவித்துள்ளனர்.

எனினும் நிகழ்ச்சி அறிவிப்பாளர் ஜேன்ஸ் பிலகர் இந்நிகழச்சியை ஆதரித்து பேசியுள்ளார்.

இறப்புக் குறித்து சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் கருத்தை முறியடிப்பதே இந்த போட்டியினது நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறான வித்தியாசமான போட்டிகளை நடத்துவதனூடாக சமூகத்தினரிடம் இந்த விடயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே எங்களது விருப்பமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களது சுய சமாதி வாசகங்கள எழுதி அனுப்பவுதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். மற்றவர்களின் வசனமாக இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் ஆக்கத் திறனுக்கு அது போதுமானதாக அமையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மரண காப்புறுதியை பெறுவதற்கும் மரணச் சடங்குகளுக்குமாக சுமார் 450,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தபோட்டியானது மோசமான ரசணை கொண்டது எனத் தெரிவித்துள்ள மரணச்சடங்கு நடத்தும் நிறுவனங்கள் சில, இப்போட்டியை நிறுத்துவதற்காக வழக்குத் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .