2025 மே 15, வியாழக்கிழமை

ஸ்கூட்டர் செலுத்தும் நாய்

Kogilavani   / 2011 மார்ச் 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் நாயொன்றை வளர்ப்புப் பிராணியாக வளர்த்துவரும் ஒருவர் அந்நாய்க்குட்டிக்கு ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். அந்நாய் தற்போது இணையத்தளங்களில் வெகு பிரபல்யமாக விளங்குகிறது.

20 மாத வயதுடைய,  நோர்மன் எனப்படும் பிரையர்ட் இன நாயானது, தனது பின்னங் கால்களால் இந்த விளையாட்டு ஸ்கூட்டரை சமநிலைப்படுத்திக்கொண்டு முன்னங்கால்களால் அதன் கைப்பிடியை தள்ளிக் கொண்டு செல்கிறது.

ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த   இந்த நாயின் உரிமையாளர்  கெரன் கோப் இந் நாய்குறித்து தெரிவிக்கையில், முதலில் இந்த நாய் பிள்ளைகளின் ஸ்கூட்டரில் விளையாடுவதற்கு ஆரம்பித்தது. நாங்கள் அதற்கு ஸ்கூட்டர்  செலுத்துவதற்கு கற்றுக்கொடுத்தால் வேடிக்கையாக இருக்கும் என நினைத்தோம்.

அதன் பின்பு நாங்கள் ஸ்கூட்டரை தள்ளிச் செல்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்தோம். தற்போது அந்த நாய் ஸ்கூட்டரை ஓட்டுவதில் மகிழ்வடைகிறது'  எனக் கூறியுள்ளார்.

அந்த நாய் ஸ்கூட்டர் செலுத்தும்  வீடியோக் காட்சியை யூ ரியூப் இணையத்தளத்தில் இதுவரை 300,000 பேர் பார்த்துள்ளனர்.

இந்த நாய், 15 மாத வயதாக இருக்கும்போது,  கீழ்படிதலுக்கான போட்டிகளில் பங்குபற்றி நான்கு முதலிடங்களைப் பெற்றதன் மூலம்  சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .