2025 மே 15, வியாழக்கிழமை

பாம்பினால் அல்லோலகல்லோலப்பட்ட ரயில் பயணிகள்

Kogilavani   / 2011 மார்ச் 16 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பயணிகள் ரயிலிலொன்றில் திடீரென பாம்பு தென்பட்டதைக் கண்டு பயணிகள் அல்லோலகல்லோமடைந்த சம்பவமொன்று போலந்தில் இடம்பெற்றுள்ளது.

கிட்யினியா மற்றும் செகோபனே ஆகிய நகரங்களுக்கிடையில்  பயணிகளை ஏற்றிக்  கொண்டு பயணித்த இந்த ரயிலில் திடீரென 3.5 அடி நீளமான மஞ்சள் நிற பாம்பொன்று ஊர்ந்தது.  பயணிகளின் இருக்கைகளுக்கூடாகவும் அவர்களது பாதங்களுக்கும் இடையிலும் அப்பாம்பு சென்று கொண்டிருந்தது.

அதனால் பீதியடைந்த பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

ரயில் லோவ்ஸ்கி நிலையத்தில் அடைந்தபோது பயணிகள் ரயிலிலிருந்து வெளியே ஓட,  பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து அந்த பாம்பினை பிடித்துள்ளனர்.

பெட்டியொன்றில் வைக்கப்பட்டு, அனுப்பப்பட்ட இப்பாம்பு பெட்டியைவிட்டு வெளியேறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தேடுதலின்போது மற்றொரு பாம்பையும் அப்பெட்டிக்குள்ளிருந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கண்டுபிடித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .