Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 21 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
400 இறாத்தல் நிறையுடைய சுமோ மல்யுத்த வீரரொருவர் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கெலி ஜினெய்டிங் எனற மல்யுத்த வீரர் பங்குபற்றி 9 மணித்தியாலம் 48 நிமிடங்கள் 52 விநாடிகளில் தனது ஓட்டத்தை ஓடி முடித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு 270 இறாத்தல் எடை கொண்ட ஒருவர் , 11 மணித்தியாலங்கள், 52 நிமிடங்கள், 11 விநாடிகளில் ஓடி நிலைநாட்டிய சாதனையை ஜினெய்டிங் முறியடித்துள்ளார்.
ஜினைடய்டிங் முதல் 8 மைல்களை ஜோக்கிங் செய்தார் இறுதி 18 மைல்களை அவர் நடந்து கடந்தார்.
கடும் மழை மற்றும் காற்றுக்கு மத்தியிலும் அவர் 26.2 மைல் தூரத்தை ஓடி முடித்தார்.
' இறுதி 5 மைல்களில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் ' நான் தவழ்ந்து போக நேரிட்டாலும் அதை செய்ய வேண்டும்' என உறுதியெடுத்துக்கொண்டேன்' என்கிறார் ஜினெய்டிங்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago