Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 31 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
லண்டனில் 5 நட்சத்திர ஹோட்டல் தொகுதியொன்றின் உரிமையாளர் ஒருவர் அங்குள்ளன உணவு விடுதிக்கு இளமையான அதேவேளை, மிகவும் கவர்ச்சிமிக்க ஊழியர்களை நியமிக்குமாறு முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.
இந்த ஹோட்டலில் தொழில் புரிந்த வயதான ஊழியர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கும் படியும், அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்களாகவும் பொன்னிறமான கூந்தல் கொண்டவர்களாகவும் குட்டைப் பாவாடை அணியக் கூடியவர்களாக இருக்கவேண்டுமென தனக்கு தெரிவிக்கப்பட்டதாக மேற்படி முகாமையாளர் விசாரணை மன்றமொன்றில் கூறியுள்ளார்.
அமையா இஸ்மாயில் (வயது 57) என்பவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் ஓர் இரவுக்கு அறையொன்றுக்கு 3500 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் அறிவிடும் ஹோட்டலிலிருந்து தனக்கு இடமாற்றம் வழங்கிவிட்டு 28 வயதான பெண்ணொருவர் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் வயதான ஊழியர்களை குறைகண்டுபிடித்து அவர்கள் விலகிச் செல்வதற்கு அழுத்தம் கொடுக்குமாறும் தனக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் மேலும் குறிபிட்டார்.
தான் கடந்த 18 வருடங்களாக அந்த ஹோட்டலில் தொழில் புரிந்த போதிலும் நியாயமற்ற வகையில் விலக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
xlntgson Saturday, 02 April 2011 08:53 PM
இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
தங்களது நிறுவனத்தில் பணியாற்றுகின்றவர்கள் எல்லாம் இளம்வயதினர் என்று காட்டிக் கொள்வதற்காகவே நோயற்ற நன்கு பணியாற்றும் நாற்பதின் மேல்பட்ட ஊழியர்களை எதாவது சாக்குபோக்கு கூறி விலக்கி விடுகின்றனர்.
அவர்கள் வேறு வேலை தேடினாலும் வயதைக் காரணம் காட்டியே அவர்களுக்கு தொழில் மறுக்கப்படுகிறது.
நடுத்தரவயதில் இருக்கும் அவர்களுக்கு பிள்ளைகளை முக்கியமாக உயர் கல்வி பயிலும் பிள்ளைகளை சமாளிப்பது கடினமாகிவிடுகிறது, தனியார் துறையில் இந்த அநியாயம் மிக அதிகம். வழக்கு யார் பேச?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago