Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியாவிலே மிக உயர்ந்த மனிதரும்,சீனாவின் மிக குள்ளமான மனிதரும் இணைந்து நாடகங்களில் நடிக்க உள்ளனர். இவர்கள் தாம் நடிக்கும் நாடகத்தால் வசூலிக்கப்படும் பணத்தை சிறுவர்களின் அறக்கட்டளைக்காக வழங்கவுள்ளனர்.
இந்த ஜோடியில் ஸு குவோயுவான் என்பவர் 7 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர். ஸாங் சுவான் என்ற குள்ள மனிதர் 3 அடி 4 அங்குல உயரத்தை மாத்திரம் கொண்டவர்.
இவர்கள் இருவரும் இணைந்து சுமார் ஒரு மாத காலம் நாடங்களில் நடிக்கவுள்ளனர். இதன்மூலம் 50,000 அமெரிக்க டொலர்கள் திரட்டப்படவுள்ளன. இப்பணம் சீனாவின் சோங்கிங் பிராந்தியத்திலுள்ள அங்கவீனமான சிறார்களுக்கான இல்லத்திற்கு வழங்கப்படவுள்ளது.
' 25 வயதான ஸாங் ஹுவானை அவரது உயரமான சகாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சிறிய பொம்மையைப் போன்று தோன்றுகிறார். அவர்கள் இருவரும் இணைந்து செயற்படும் போது மிகவும் வேடிக்கையாக காணப்படுகிறார்கள்' என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஜோடி நாடகத்தில் 'பூமி சகோதரர்கள்' எனும் அழைக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக 24 வயதான ஸு குவோயுவான் தெரிவிக்கையில், 'நாடகத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக வசிக்கின்றோம். வீட்டில் வெவ்வேறு அளவுகளிலான இரண்டு மலசலக்கூடம், இரண்டு ஸிங்க், இரண்டு சமயலறை என அனைத்துமே எங்களது உயரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
ஆனால், பயண செய்யும்போது நாம் பணத்தை சேமித்துக்கொள்வோம். ஏனெனில், ஹுவான் எனது காற்சட்டைப் பையில் அமர்ந்து கொள்வார்' எனக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago