2025 மே 15, வியாழக்கிழமை

கால்களை இழந்தபின் நீச்சல் சாதனையாளரான மாணவன்

Kogilavani   / 2011 மே 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பூகம்பத்தினால் கால்கள் இரண்டையும் இழந்த சீன மாணவனொருவர் மிகப் பெரிய நீச்சல் வீரராகியுள்ளார்.

தேய் கோஹோங் எனும் இந்த மாணவன் மூன்று வருடங்களுக்கு முன் சீனாவின் சிச்சுவன் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் சிக்கி இரு கால்களையும் இழந்தார்.

அவர் கல்விக் கற்றுக்கொண்டிருந்த பாடசாலையின் கூரை, பூகம்பத்தினால் வகுப்பறையில்  வந்து விழ அங்கிருந்த 26 மாணவர்கள் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தொன் கணக்கான எடையுள்ள கூரையின் இடிப்பாட்டுக்குள் சிக்கியதால் தேய் கோஹோங்கின் கால்கள் படுகாயமடைந்து துண்டிக்கப்பட்டன.

அதன் பின்பு அவர் பல சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அதையடுத்து ஊனமுற்றோருக்கான  விளையாட்டுத்துறை அதிகாரிகளால் தெரிவு செய்யப்பட்டு நீச்சல் பயிற்சிகளைப் பெற்றார். 

தற்போது 18 வயதான கோஹோங், அடுத்த  வருடம் லண்டனில் நடைபெறவுள்ள பராலிம்பிக்ஸ் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார்.

'நான் முன்னர் தொழிற்சார்  நீச்சல் பயிற்சியெதுவும் பெற்றிருக்கவில்லை. ஆனால் வைத்தியர்கள் நீச்சலானது உடலுக்கு நல்லது என்று தெரிவித்தனர். அதனால் நான் அதனை முயற்சிசெய்தேன்' என கோஹோங் தெரிவித்துள்ளார்.

'நான் எதேட்சையாக இதனில் ஈடுபட்டேன். லண்டனுக்குச் சென்று எனக்கு என்ன முடியும் என்பதை வெளிப்படுத்துவற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை' என்கிறார் அவர்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 16 May 2011 09:30 PM

    ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே வாழ்வென்றால் போராட்டம் போர்க்களமே!

    Reply : 0       0

    Balan Tuesday, 17 May 2011 03:01 PM

    எம் நாட்டவர்களுக்கு அனுதாபம் கொள்ள மாத்திரம்தான் தெரியும். சீனர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் ஊக்கம் கொடுக்கவும் தெரியும். கற்க வேண்டிய பாடம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .