2025 மே 15, வியாழக்கிழமை

பிரிட்டனின் முதலாவது நிர்வாண ஹோட்டல்

Kogilavani   / 2011 மே 19 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிர்வாண இயற்கை விரும்பிகளை மகிழ்விக்கும் வகையில் பிரிட்டனின் பேர்மிங்ஹாம் பிராந்தியத்தில் நிர்வாண ஹோட்டலொன்று திறக்கப்பட்டுள்ளது. ஏர்டிங்க்டன் நகரிலுள்ள இந்த நிர்வாண ஹோட்டல்   'இயற்கை' விரும்பிகளின் சொர்க்கமாக இருக்குமாம்.

பிரிட்டனின் முதலாவது நிர்வாண ஸ்பா ஹோட்டல் இதுவென இந்த ஹோட்டலின் உரிமையாளர்  தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் இங்கு ஆடையின்றி இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த உல்லாச ஹோட்டலில் 77 அறைகள்  உள்ளன.

நீராவிக்குளியல், மசாஜ் நிலையம், பியூட்டி பார்லர்,  உடற்பயிற்சி நிலையம் உட்பட்ட வசதிகளை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

'காலநிலைக்கேற்ற இடத்தை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.  பிரிட்டனில் இயற்கைத்துவ (நிர்வாண) நிகழ்வுகள் அநேகமாக உள்ளக நிகழ்வுகளாகவே உள்ளன. பொதுவாக 365 நாட்களும் இப்படி இருக்க வேண்டுமென்றால் இந்த நிலைதான் காணப்படும். ஏனெனில் பிரித்தானிய கால நிலை நம்பமுடியாதது என ஹோட்டல் உரிமையாளர் டிம் ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 20 May 2011 09:57 PM

    உடை அணிந்து செல்பவர்கள் தடுக்கப்படுவார்களா? ஊழியர்களும் சிப்பந்திகளும் அம்மணமாக இருப்பரா? தூண்டுதல் விருப்பமா, விருப்பம் தூண்டலா?

    Reply : 0       0

    jo Monday, 23 May 2011 07:32 PM

    இவங்கள் திருந்த மாட்டாங்கள்.

    Reply : 0       0

    fahmy Wednesday, 01 June 2011 04:29 AM

    இப்போதெல்லாம் இதுபோல் அதிகமான செயல்கள் விரைவாக நடக்கின்றன .நான்கு சுவர்களுக்குள் இடம்பெற வேண்டியவிடங்கள் நான்குபேர் பார்க்கும்படி நடக்குமானால் .உலக அழிவை இறுதிநாளை எதிபாருங்கள்
    1400 வருடங்களுக்குமுன் முகம்மதுநபி சொன்ன சொல் சரிதானே உலக அழிவு அண்மிக்கும்போது வெட்கம், நம்பிக்கை, உணவில் அபிவிருத்தி என்பன இல்லாமல் போய்விடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது .

    Reply : 0       0

    fahmy Wednesday, 01 June 2011 04:36 AM

    ஆண்கள் ஆதம்கள் ,பெண்கள் ஏவாள்கள் இது கெட்டவர்களின் சுவர்க்கம்.
    தாய்மையின் புனிதம் தாய் செய் பாசம் அன்பு ,குடும்ப பாசபிணைப்பு ,வெட்கம், மானம் ஒழுக்கம் எதுவும் இல்லாத மிருகங்களைவிடவும் கேவலமான அநாகரிகமான சாத்தானின் பிரதிநிதிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .