2025 மே 15, வியாழக்கிழமை

பிரிட்டனின் மிக பலசாலியான சிறுமி

Kogilavani   / 2011 மே 23 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த 11 வயதான சார்ளி கிறேக் பிரிட்டனின் மிகச் சிறந்த வலிமையான சிறுமியாக விளங்குகின்றாள்.

4 அடி, 7 அங்குல உயரமன இச்சிறுமி 32 கிலோகிராம் எடையையே கொண்டுள்ளாள். தனது உடல் எடைக்கு சமமான அளவு பளுவை தூக்கக்கூடியவளாக இவள் விளங்குகிறாள்.

பிரிட்டனின் கிளாஸ்கோவைச் சேர்ந்த சார்ளி கிறேக், கனிஷ்ட பொதுநலவாயப் போட்டியில் பங்குபெற வேண்டுமென்பதே தனது கனவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அவள் வாரத்தில் 12 மணித்தியாலங்களை பளு தூக்குவதற்கான பயிற்சிக்காக செலவிடுகின்றாளாம்.

'அது உண்மையில் கடினமான வேலை. இந்த பயிற்சியில் ஈடுபடும்போது நான் பலதடவைகள் காயப்பட்டுள்ளேன். ஆனால் நான் என்ன செய்துள்ளேன் என திரும்பி பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியே ஏற்படுகின்றது' என்று சார்ளி கிறேக் கூறியுள்ளார்.
'எனது பயிற்றுநர் நான் ஆற்றல் மிக்க சிறுமியென்று கூறி என்னை இந்த விளையாட்டில் முன்னோக்கி நகரும்படி வழிநடத்துவார்.

ஜிம்மில் எனது சகாக்களும் எனக்கு அதிகமான உற்சாகங்களை தருவார்கள். என்னால் பளுதூக்க முடியாமல் போகும்போது 'இன்னும் மேலே மேலே' என்று கூறி உற்சாகப்படுத்துவார்கள். அதனை மனதில் நிறுத்தி நான் இதில் மேலும் கவனம் செலுத்தினேன்' என்று அச்சிறுமி மேலும் தெரிவித்துள்ளார்.

சேர்ளியின் தாய் 20 வருடங்களாக பளுதூக்குதல் விளையாட்டில் ஈடுபட்டவராம். சேர்ளியின் சகோதரர் டேனியலும் (20) இவ்விளையாட்டில் சம்பியன் பட்டம் வென்றமைக் குறிப்பிடத்தக்கது.

9 வயதில் பளு தூக்கும் விளையாட்டில் முதன் முதலில் ஈடுபட்ட சேர்ளி தினமும்  நூடில்ஸ், மரக்கறிகள், பழங்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வதை அவளின் தாய் உறுதிப்படுத்தி வருகிறார்.


You May Also Like

  Comments - 0

  • fazil Thursday, 26 May 2011 05:31 PM

    இது மிகவும் ஆச்சரியம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .