2025 மே 15, வியாழக்கிழமை

இணைபிரியா தோழனாக மலைப்பாம்பு

Kogilavani   / 2011 மே 26 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போலந்தை சேர்ந்த டேவிட் நீட்ஸியலக் என்பவரின் தோழனாக மலைப்பாம்பொன்றே விளங்குகிறது.

அண்மையில் அவர் அந்த மலைப்பாம்புடன் பூங்காவொன்றுக்கு சென்றபோது பார்வையாளர்களை அந்த பாம்பு வெகுவாக கவர்ந்தது.

போலந்து ஸாமோஸ்க் நகரை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய டேவிட் நீட்ஸியலக், பாம்புகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது வீட்டில் போரிஸ் என்ற 3 அடி நீளமான மலைப்பாம்பொன்றை வளர்த்து வருகின்றார்.

அவர் அந்த பாம்பை விட்டு எங்கும் தனியே செல்வதில்லை. அந்த பாம்பை விட்டு தன்னால் பிரிந்திருக்க முடியவில்லை என அவர் கூறுகிறார்.

'இந்த பாம்பு வெளிக்காற்றில் இருப்பதற்கு மிகவும் விரும்புகிறது. குறிப்பாக, வெப்பமான காலநிலையை மிக விரும்புகிறது.  என்னைப் போலவே மற்றவர்களும் அப்பாம்பை  விரும்புகின்றனர். அதனை முதலில் காண்பவர்களுக்கு அது உண்மையான பாம்பு என நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் பின்னர் அவர்கள் அதை தொட்டுப் பார்க்க விரும்புகின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .