2025 மே 15, வியாழக்கிழமை

சிறார்களுக்கு 'செக்ஸி' ஆடைகள் விற்க பிரிட்டனில் தடை

Kogilavani   / 2011 ஜூன் 06 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய கடைகளில் சிறுமிகளுக்கான கவர்ச்சி ஆடைகளை விற்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

அங்கு, 7-8 வயதான சிறுமிகளுக்குகூட 'பாட்' வைத்த பிரா, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் எழுதப்பட்ட ஆடைகள், உள்ளாடைகள் என்பன விற்கப்படுவதாக புகாரிடப்பட்டுள்ளது.

தாய்மார்களின் சங்கம் எனும் அமைப்பின்  தலைவியான ரெக் பெலி என்பவர் இது தொடர்பாக அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

சிறார்களுக்கான ஆடைகளில் ஆபாசமான சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமிகளுக்கான ஆடையொன்றில் 'எதிர்கால பாலியல் பட நட்சத்திரம்' என எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இது சிறார்களை பாலியல் மயமாக்குவதாகும் என அவர் விமர்சித்துள்ளார்.

சிறார்களுக்கான ஆடை வடிவமைப்பாளர்கள், வாடிக்கையாளர்களின் இரசனைக்குப் பதிலாக ஒழுக்கக் கோவையொன்றில் கையெழுத்திடுவது அவசியமாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இப் பின்னணியில் இத்தகைய ஆடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 07 June 2011 09:34 PM

    sex obsession சிறாருக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா?
    சிறு பிள்ளைகளுக்கு ஆடையே தேவை இல்லை என்னும் பழங்குடிகள் மலைவாசிகள் ஆதிவாசிகள் காட்டுவாசிகள் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 08 June 2011 02:22 AM

    சாதாரணமான ஆடை அணிந்தாலும் இன்று பெண்களை சிறுவர், பெரியவர் என்று வித்தியாசமில்லாது செக்ஸ் கண்ணாடிக்கூடாகத்தான் இந்த ஆண் சமுகம் பார்க்கப்பழகியுள்ளது. இதற்கு முழுப்பொறுப்பும் பெண்கள்தான் .யாருக்காக இவர்கள் அழகாக உடுக்கிறார்கள் ? அடுத்தவன் ரசிக்கவேண்டும் அல்லது ஏங்க வேண்டுமென்ற வேசம்தானே. இதற்கான ஒரேமாற்றுவழி இஸ்லாமிய பர்தா உடைதான். இன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மேற்குநாட்டு நங்கையர் பார்தாவையும் விருப்புடன் ஏற்றுக்கொண்டதன் காரணம் சைத்தான்களின்தீய பார்வையிலிருந்து தம் அங்கங்களை பாதுகாக்கவே.

    Reply : 0       0

    asker Wednesday, 08 June 2011 09:34 PM

    சிறியவர்கள் மாத்திரம் அல்ல , பெரியவர்களுக்கும் இந்த சட்டத்தை கொண்டுவந்தால் நல்லது, இஸ்லாமிய மார்க்கத்தின் படி,

    Reply : 0       0

    ruthra Thursday, 09 June 2011 12:51 AM

    எது நடந்தாலும் பெண்களாலே அது நடந்தது என்று குற்றம் சாட்டுவதை சற்று நிறுத்திக்கொள்ளுங்கள். பெண்களின் உடைகள் குறித்து தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கே உண்டு. ஆண்கள் ஏங்க வேண்டுமென்பதற்காக பெண்கள் ஆடைகளை அணிவதில்லை. அப்படி அணியவேண்டும் என்ற எண்ணத்தை பெண்களுக்குள் வலுவாக திணித்தது ஆண்கள்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    Reply : 0       0

    hari Thursday, 09 June 2011 02:26 AM

    பர்தா அணியும் பெண்கள் எவறுமே தவறு செய்யவில்லை என்று உறுதியாக கூற முடியுமா? பெற்றோர்களே பெண் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித் தரவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .