2025 மே 15, வியாழக்கிழமை

ஓடிக்கொண்டிருந்த காரின் கண்ணாடியில் மலைப்பாம்பு (வீடியோ)

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தம்பதியொன்று தமது குழந்தைகள் சகிதம் காரில் சென்று கொண்டிருந்தவேளை, காரின் முன்கண்ணாடியில் திடீரென மிக நீளமான பாம்பு தோன்றி அவர்களை அச்சத்திலாழ்த்திய சம்பவமொன்று  அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மெம்பீஸ் நகரில்  ரசெல் பிஷர் எனும்  பெண் நெடுஞ்சாலையில் காரை செலுத்திக்கொண்டிருந்தார். அவரின் கணவர் டொனி மற்றும் 3 பிள்ளைகளும் காரில் இருந்தனர்.

அப்போது திடீரென காரின் கண்ணாடியின் முன்னால் மிக நீளமான மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதை கண்டு ரசெல் திடுக்கிட்டு அலறிரினார். அவரின் கணவர் டொனி பிஷர் தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த பாம்பின் நகர்வுகளை ஒளிப்பதிவுசெய்துள்ளார்.
எனது கணவர் காரின் மூலையில் ஏதோ இருப்பதை அவதானித்துள்ளார் என்று டோனி தெரிவித்துள்ளார்.

குறித்த பாம்பு சுமார் 3 நிமிடங்கள் காரின் கண்ணாடியில் இருந்துள்ளது. இதன்போது என்ன செய்வதெனத் தெரியாத ரசெல் முடிந்தவரை காரை செலுத்திக்கொண்டிருக்க முயற்சித்துள்ளார்.

மரங்கள் அடர்ந்து காணப்பட்ட பிரதேசத்தில் காரை நிறுத்தியிருந்தபோது குறித்த பாம்பு காரின் என்ஜினில்  புகுந்திருக்கலாம் எனவும் என்ஜினின் சூட்டினால் அது பின்பு வெளியே வந்திருக்கலாமெனவும் இத்தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

-


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .