2025 மே 15, வியாழக்கிழமை

இரு பிள்ளைகளின் தந்தையின் வயிற்றில் கருப்பை, சூலகங்கள்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவைச் சேர்ந்த ஆணொருவரின் வயிற்றில் பெண்களின்  கருப்பை, சூலகங்கள் முதலான இனப்பெருக்க உள் அங்கங்கள் இருந்தைக் கண்டு மருத்துவர்கள அதிர்ச்சியுற்றுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ரியாலு என்ற நபரின் வயிற்றிலேயே இவ்வாறு பெண்களுக்கான அங்கங்கள் இருந்தன.

விவசாயியான  இந்நபருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு குடலிறக்கம் ஏற்பட்டிருக்கலாமென சந்தேகித்துள்ளனர். ஆனால் அவரை சிறிய சத்திரசிகிச்சைக்கு  உட்படுத்தியபோது அவரது வயிற்றில் கருப்பை, இரு சூலகங்கள், பலோபியன் குழாய், என்பனவற்றை மருத்துவர்கள் கண்டனர்.

மருத்துவர் பிரமோத் குமார் ஸ்ரீவஸ்தவா இது குறித்துத் தெரிவிக்கையில், 'குறித்த நபர் வெளியில் ஆணுக்குரிய அங்கத்தை கொண்டுள்ளார். உடற்திட நிலையிலுள்ள அவர்  சாதாரண வாழ்க்கையே வாழ்ந்துள்ளார்' எனக் கூறியுள்ளார்.

'அவரது வயிற்றில் கருப்பை உட்பட பெண் இணப்பெருக்க அங்கங்கள்  இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியுற்றோம். சத்திரசிகிச்சை மூலம் அவற்றை அகற்றிவிட்டோம்' எனவும் மருத்துவர்  ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .