Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காப்புறுதிப் பணம் பெறுவதற்காக, தனது மனைவியை கொலை செய்வதற்கு ஒருவரை ஒப்பந்தத்தில் நியமித்த ஒருவருக்கு ருமேனிய நீதிமன்றமொன்று 16 வருடம் 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் ஒப்பந்தத்திற்காக கொலை செய்த நபருக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணியான விக்டர் டியோரெஸ்கு என்பவரே தனது மனைவி வயலெட்டாவை கொலை செய்வதற்கு தூண்டியுள்ளார். அப்பெண் கொலை செய்யப்பட்டால் அவரின் பெயரில் செய்யப்பட்டிருந்த ஆயுள் காப்புறுதி மூலம் 150,000 யூரோக்களை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் எண்ணியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக அவர் தனது கட்சிக்காரர் ஒருவரின் மகனான ஏர்வின் விக்டர் பிரெஸ்மெரீனு என்பவரை ஒப்பந்தத்தில் நியமித்தார்.
கடந்த வருடம் வயலேட்டா கழுத்தில் 25 தடவைகள் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இக்கொலையின்போது விக்டர் பிரெஸ்மெரீனுவின் கைரேகை அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர் பொலிஸாரினால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தான் எவ்வாறு அவ்வீட்டினுள் நுழைய வேண்டும் என்பது தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதங்களையும் அவர் விசாரணையின்போது பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். விக்டர் பிரெஸ்மெரீனுவுக்கு 16 வருடங்கள், 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ikmsm Friday, 02 March 2012 10:42 PM
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள்" ....- ஆல் குர்ஆன் 6:151
Reply : 0 0
tharshan Monday, 05 March 2012 01:38 PM
நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவை இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago
37 minute ago
48 minute ago