Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2012 மார்ச் 07 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனிய அரசாங்கம் தனது சர்வதேச விமான நிலையத்தில் கவர்ச்சியான எல்லை பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளது. யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்களுக்கு விமான நிலையத்திலேயே தனது நாட்டைப் பற்றி நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதற்கான காரணம்.
உக்ரைனும் போலந்தும் இணைந்து நடத்தும் இவ்வருட யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளன. இப்போட்டிகளைப் பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையான கால்பந்து ரசிகர்கள் வெளிநாடுகளிலிருந்து உக்ரைனுக்கு வருவர் என உக்ரைனிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில் தலைநகர் கீவ்விலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடவுச்சீட்டுகளையும் முதலான ஆவணங்களை சோதிக்கும் பயணிகளையும் சோதிக்கும் எல்லைக் காவல் படையில் கவர்ச்சியான பெண்களை ஈடுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இப்பெண்கள் இராணுவ சீருடை அணிந்திருப்பர். ஆனால் நவீன பாணி சிகையலங்காரம் மற்றும் சகிதம் காணப்படுவர். இதற்காக இப்போதே அவர்களுக்கு தொழிற்சார் அழகுக்கலை நிபுணர்களின் மூலம் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. (படம்: (ராய்ட்டர்ஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
41 minute ago
52 minute ago