2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கடவுச்சீட்டு, பிரயாணச்சீட்டின்றி பிரிட்டனிலிருந்து இத்தாலிக்கு விமானத்தில் சென்ற சிறுவன்

Kogilavani   / 2012 ஜூலை 25 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 ஒரு வயது சிறுவனொருவன் கடவுச்சீட்டு, விமானப் பிரயாண நுழைவுச் சீட்டு எதுவுமின்றி பிரிட்டனிலிருந்து இத்தாலிக்கு  விமானப்பயணம் மேற்கொண்டதாக பிரிட்டனின் மன்செஸ்டர்  விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் மற்றொரு குடும்பமொன்றுடன் கலந்து செல்வது மன்செஸ்டர்  விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி ஜெட் விமானமானது நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது இச்சிறுவன் குறித்து பயணிகள்  சந்தேகம் கொண்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இச்சிறுவன் ஆவணங்களின்றி பயணம் செய்துகொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

சிறுவனின் ஆவணங்களை உறுதிப்படுத்தாமல் பயணம் செய்ய அனுமதித்ததற்காக விமான சேவை உத்தியோகஸ்தர்கள் பலர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்செஸ்டர் விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சிறுவனின் ஆவணங்கள் பாதுகாவலர்களாலும் விமான நுழைவுப் பகுதியிலும் முறைப்படி சோதனை செய்யப்படவில்லையென்பது நிரூபணமாகிறது.

குறித்த சிறுவன் பாதுகாப்பு சோதனைப் பகுதியினூடாகவே சென்றுள்ளான். எனவே நாம் பயணிகளின் பாதுகாப்பு விடயத்தல் சமரசம் செய்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவன் பெற்றோருக்கு அறிவிக்காமல் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நம்பப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .