Editorial / 2026 ஜனவரி 27 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது தோழியின் திருமணத்துக்காகப் பெண் ஒருவர் 2 மாதங்களில் 15 கிலோகிராம் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
அந்த 26 வயதுப் பெண் நினைத்தபடி உடல் இளைத்துவிட்டார்.
சீனாவைச் சேர்ந்த அந்த பெண்ணின் கதை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
தோழியின் திருமணத்தில் பெண் தோழியாக இருக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
உடனே 65 கிலோகிராமாக இருந்த தமது உடல் எடையை அவர் குறைக்க எண்ணினார். முக்கிய உணவுகளைத் தவிர்த்தார்.
தினமும் சிறு அளவில் காய்கறிகளும் கோழி இறைச்சியும் உண்டார்.
தீவிரமாக உடற்பயிற்சி செய்தார். நாள்தோறும் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் ஓடினார். இதனால் 2 மாதங்களில் 15 கிலோ குறைத்து 50 கிலோகிராம் எடைக்குத் தம்மை மாற்றினார்.
இந்த மாற்றம் முதலில் அவருக்கு உற்சாகம் தந்தது. ஆனால் நாள்கள் நகர நகர உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன.
நாள்முழுதும் உடல் வறட்சியாக இருப்பதை உணர ஆரம்பித்தார். அடிக்கடி பசி எடுத்தது. தாகம் அதிகமானது. மயக்கமும் படபடப்பும் ஏற்பட்டன. மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார்.
ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதித்தபோது அவருக்கு முதல்கட்ட நீரிழிவு நோய் ஏற்பட்டிருப்பது உறுதியானது. 3 மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறினார்.
அந்தப் பெண்ணின் கதையைக் கேட்டுப் பலர் அதிர்ச்சியுற்றனர்.
"திருமணம் என்றால் மணப்பெண் உடல் எடையைக் குறைத்து அழகாக இருக்க விரும்புவார். இவர் ஏன் இப்படி?" என்று சிலர் கேட்டனர்.
"மணப்பெண் கூட இந்த அளவுக்குச் செய்யமாட்டார்" என்று மற்றுஞ்சிலர் கருத்துப் பதிவிட்டனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago