2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

ஆசிரியைக்கு ’ஐ லவ் யூ‘ கூறிய மாணவர்கள் கைது

Ilango Bharathy   / 2022 நவம்பர் 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை ஒருவருக்கு மாணவர்கள் சிலர், காதல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவரை குறித்த கல்லூரியில் கற்கும் மாணவர்கள் சிலர் கடந்த சில  நாட்களாக காதலிப்பதாகத் தெரிவித்து தொடர்ந்து தொந்தரவளித்து வந்துள்ளனர்.

குறிப்பாக அவ்ஆசிரியை எங்கு சென்றாலும் அவரைப்  பின்தொடர்ந்து செல்லும் மாணவர்கள் அவரிடம் ஆபாசமாகவும்  பேசி வந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியை அவ்வப்போது எச்சரித்து வந்தாலும் அம்மாணவர்கள் இதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து அத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து  அம்மாணவர்களின் பெற்றோர்களிடம் இது குறித்து ஆசிரியை தெரியப்படுத்தியபோதும் அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாணவர்கள்,  அவ்ஆசிரியைக்கு 'ஐ லவ் யூ எனக் கூறி தொந்தரவளித்த வீடியோவொன்று  இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகின்றது.

 இதனால் விரக்தி அடைந்த ஆசிரியை, இது குறித்துப்  பொலிஸ் நிலையில் புகார் அளித்துள்ளார்.

 இந்நிலையில்  இப்புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஒரு சில மணி நேரங்களிலேயே அவர்களைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X