Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெஷாவர்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண் தலையில் ஆணியுடன் அனுமதிக்கப்பட்டார்.
அந்த பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து பெஷாவர் பொலிஸார், இந்த விஷயத்தை கையில் எடுத்தது விசாரித்தது.
பெஷாவர் பொலிஸின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்பாஸ் அஹ்சன் இது தொடர்பாக செய்துள்ள டுவிட்டில் "ஆண் குழந்தை வேண்டும் என்றால் தலையில் ஆணி அறைந்து கொள் என்று கூறிய ஒரு போலி துறவியின் பேச்சை நம்பி அப்பாவி பெண் தலையில் ஆணி அடித்து உள்ளார். அந்த போலி துறவியை சட்டத்தின் முன்னிறுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிகிச்சை அளித்த டாக்டர் ஏன் பொலிஸார் முறைப்பாடு செய்யவில்லை என்பதையும் குழு விசாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஏற்கெனவே 3 பெண் குழந்தைகளின் தாய் என்றும், நான்காவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்தால் கைவிட்டு விடுவேன் என கணவர் மிரட்டியதால் அந்த பெண் போலி துறவியின் பேச்சை நம்பி ஆணி அடித்து கொண்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவனின் மிரட்டலை அடுத்து தன்னை கடவுள் போல காட்டி கொண்ட போலி ஆசாமியிடம் சென்ற அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு தாயத்து, ஓத வேண்டிய பொருட்கள் மற்றும் ஆணி ஆகியவற்றை கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்று அந்த போலி துறவி கூறியது போல தன் தலையில் ஆணியை அடித்து கொண்டுள்ளார். இதனால் அவர் வலியால் அலற தொடங்கியதை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மண்டையிலிருந்து ஆணியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
போலி துறவி கொடுத்த இரண்டு அங்குல ஆணி பெண்ணின் நெற்றியின் மேல் துளைத்திருந்தது. ஆனால் அது மூளைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிய வந்தது.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago