2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீன கப்பலில் வந்த பூனை... கொரோனா அச்சத்தால் திருப்பி அனுப்பும் முடிவுக்கு பீட்டா எதிர்ப்பு!

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால்  ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. 

சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. 

இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பூனை ஒன்று இருந்தது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட விளையாட்டு பொம்மைகள் இருந்த கன்டெய்னரில் இந்த பூனை, கூண்டில் அடைக்கப்பட்ட நிலையிலிருந்ததுள்ளது. 

கொரோனா வைரஸ் விலங்குகளின் மூலமாகக் கூட பரவலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள், அந்த பூனை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்பி வைத்து விடலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

 ஆனால் அதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து பீட்டா, செல்ல பிராணிகள் மூலம் வைரஸ் பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அந்த பூனை வந்ததில் இருந்து உணவு, தண்ணீர் இல்லாமல் அடைத்து வைக்கப் பட்டிருப்பதால் அது இறந்து விடும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், சீனாவில் இருந்து வந்த அந்த கப்பல், பல துறைமுகங்களின் வழியாக வந்திருப்பதால், அந்த பூனை வேறு ஏதேனும் துறைமுகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X