Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் பகுதியில், பிம்பால்கோன் கிராமத்தில் திலிப் ஜக்தாப் என்பவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் அவர் வளர்த்து வந்த நாயை சிறுத்தை ஒன்று துரத்தி வந்தது.
அப்போது நாய் இவரது வீட்டிற்குள் புகுந்ததால் அதை துரத்தி வந்த சிறுத்தையும் வீட்டிற்குள் புகுந்தது. நாய் பின்வாசல் வழியே வெளியே ஓட, சிறுத்தை வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டது.
இதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார் திலிப். வனத்துறை விரைந்து வந்து நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.
பின்பு அந்த சிறுத்தை பத்திரமாக காட்டுக்குள் விடப்பட்டது. வீட்டிற்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
9 hours ago
03 May 2025