2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹொலிவுட் பட வில்லனை போல் சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹொலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து ட்ரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அரசியல் எதிரியான ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது உக்ரைனில் விசாரணை நடத்த அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.

இது தொடர்பாக ட்ரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நடத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வு குழு அவர் மீதான புகார்களை முறைப்படி வெளியிட்டுள்ளது. 

டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான நடைமுறையில் இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை ஆகும். ட்ரம்ப், ஆரம்பத்தில் இருந்து இந்த பதவி நீக்க விசாரணையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் பதவி நீக்க விசாரணையை நடத்தி வரும் ஜனநாயக கட்சியினரை அச்சுறுத்தும் தோனியில் ஜனாதிபதி டிரம்பை, ஹொலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் வில்லன் தானோஸ் போல் சித்தரித்து, ட்ரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. 

அந்த வீடியோவில் தானோஸ் உருவில் இருக்கும் ட்ரம்ப் ‘நான் தவிர்க்க முடியாதவன்’ என கூறிவிட்டு சொடக்கு போடுகிறார்.

அவெஞ்சர்ஸ் படத்தில் வில்லன் தானோஸ் ஒரு சொடக்கில் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியை அழித்துவிடுவார். அதே போல் டிரம்ப் நினைத்தால் ஒரு சொடக்கில் ஜனநாயக கட்சியின் விசாரணையை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X