2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

4 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்

Freelancer   / 2023 மே 02 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நடத்தப்பட்ட  வாராந்த நிகழ்வில்   நான்கு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி -  பொன்நகர் மத்தி கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட இ. செபஸ்ரியான் பீற்றர், கயேந்திரன் நாகராணி,  கந்தசாமி உதயகுமார் ஆகிய மாணவர்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டம் -  உடையார்கட்டு  தெற்கு, உடையார்கட்டை சேர்ந்த அழகு சர்மிளா என்ற மாணவிக்கும்  துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டதுடன்

இவ் மாணவர்களுக்கு  போக்குவரத்து செலவுகளும் வழங்கப்பட்டன. இந்த  செயற்றிட்ட உதவிகளை கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்   ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X