Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்நமான ‘வடதாரகை’ படகில், முன்னுரிமைப் படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஏற்றிவிட்டு, அதன்பின்னரே ஏனைய அத்தியவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள் பயணிப்பதற்கு அனுமதிப்பதால், அரச உத்தியோகத்தர்கள், பொதுத் தேவைகளுக்கு செல்வோர் எனப் பலரும் பாதிக்கபடுவதுவதுடன் நெடுந்தீவுக்கான பயணிளை கடற்படையினர் மிருகங்களை போல் நடத்துவதாகவும் பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு ‘குமுதினி’ படகு, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில், திருத்தப் பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ‘வடதாரகை’ படகு மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருவதுடன், தினமும் காலை ஏழு மணி மற்றும் 2.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கும் காலை 8.30, நான்கு மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கும் சேவையில் ஈடுபடுவதுடன் 100 வரையான பயணிகளை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றிச் செல்ல கடற் படையினரால் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றில் பணியாற்றும் 70 சதவீதமான உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பணிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், பயணிகள் மிருகங்களைப் போல் கடற்படையினரால் அடைத்து வைத்துவிட்டு, முதலில் சுற்றுலாப் பயணிகளை ‘வடதாரகை’ படகில் ஏற்றி விட்டு, எஞ்சிய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன் ஏனைய பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இவ்வாறு பல்வேறு தேவைகளை கருதி பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பயணிகள், குறிகாட்டுவானிலும் நெடுந்தீவிலும் தடுத்துநிறுத்தப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago