2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்துக் குருமார்களுக்கான பயிற்சி பட்டறை

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார்  மாவட்டச் செயலகம், மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையுடன் இணைந்து நடத்திய இளம் இந்து குருமார்களுக்கான விசேட  பயிற்சி பட்டறை சனிக்கிழமை (17) உப்புக்குளம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில்  நடைபெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்ட இந்து மத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள், வளவாளர்களாக முனீஸ்வரன் ஆலய தர்மகர்த்தாவும் யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பத்மநாப சர்மா ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்கான ஒழுங்குகளை மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ. நித்யானந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X