Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 டிசெம்பர் 12 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே கடற்கரையில் இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு புதன்கிழமை (11) காலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடற்கரைக்கு சென்று பார்த்தபோது 18 அடி நீளமும் 2 டொன் எடையும் கொண்ட அரிய வகை இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் கரை ஒதுங்கிய திமிங்கல உடலை ஜே.சி.பி உதவியுடன் மீட்டு கால்நடை மருத்துவரை கொண்டு சென்று இறந்த திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டுள்ளது.
இறந்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது. இந்த வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது. ஆனால் தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத்திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் எனவும் இது 18 அடி இருப்பதாகவும் , பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் உள்ள பாறை போன்றவற்றாலும் மோதி அடிபட்டு, இறந்து உடல் அலைகளால் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .