Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Janu / 2024 மார்ச் 25 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் , அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறி , அவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக உங்களையும் அழைத்துச் சென்று கனடாவில் இறக்கி விடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரிடம் கூறியுள்ளார்.
அதற்காகச் சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் ஊடக நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஊடகவியலாளர் என அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள, அந்நிறுவனத்திற்கு ஒரு தொகை பணம் வழங்க வேண்டும் என கூறி இளைஞனிடம் இருந்து 43 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்று, இளைஞனுக்கு ஊடக நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார்.
பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும் கனடாவில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதாக இளைஞன் அறியாத நிலையில், தனது பணத்தினை மீள தருமாறு கோரிய போது, சந்தேக நபர் இளைஞனின் தொடர்பை துண்டித்துள்ளார்.
அதனால், இது தொடர்பில் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்
தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர் .மேலும் இளைஞனுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் ஊடக நிறுவனத்தை சந்தேக நபரே நடாத்தி வருவதாகவும் அவர் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
46 minute ago
8 hours ago