Editorial / 2025 மார்ச் 16 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்
கச்சதீவு ஆலயத்துக்கு வந்த பெண் ஒருவரின் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீல் காங்கர தெரிவித்தார்.
33 வயதுடைய குறித்த பெண் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.அவரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித ஆவணமும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார். விசாரணைகளின் போது, இந்த பெண் மாறுபட்ட விலாசங்களை கூறியதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண் கொள்ளை மற்றும் திருடுவதற்காக ஆலயத்துக்கு வந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அந்த பெண்ணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago