Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்து பொதி செய்யப்பட்டு இடமாற்றம் செய்த 05 பேரை கடற்படையினர் வியாழக்கிழமை (04) கைது செய்துள்ளனர்.
இதன்போது , 589 கடல் அட்டைகள் , 03 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டைவிங் கியர்கள் மீட்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 23 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .
மேலும் , சந்தேகநபர்கள் 05 பேருடன் கடல் அட்டைகள், டைவிங் கியர் மற்றும் 03 ஸ்கூட்டர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
றோஸரியன் லெம்பெர்ட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .