2025 மே 17, சனிக்கிழமை

கால்நடைகளை திருட வந்தவர்கள் கட்டிவைத்து தாக்கினர்

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில், பெரும்பான்மை இனத்தவர்கள், தமிழ் கால்நடை வளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருடமுற்பட்டபோது, திருட்டு முயற்சியைத்  தடுத்த தமிழ் கால்நடை வளர்ப்பாளர்,  பெரும்பான்மை இனத்தவர்களால் கட்டிவைத்து தாக்கப்பட்டார். அவர் தற்போது முல்லைத்தீவு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவரும் சிவக்கொழுந்து கந்தசாமி என்ற கால்நடை வளர்ப்பாளரே இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்பட்டார். 

கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ் மக்களின் கால்நடைகளை, வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ச்சியாக திருடி வருவதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். கால்நடைகள் திருடப்படும்போது தடுக்கின்ற தமிழ் மக்களை, பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்குகின்ற சம்பவங்கள், தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும்  அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள், இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்கும் அபாயம் எழுந்துள்ளதால், இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கொக்குத்தொடுவாய் மக்கள் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபரை, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .