2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி  மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

கிளிநொச்சி  மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும், 16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. 

07  சிறுவர்கள் அடித்து காயப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று 07 சிறுவர்கள் மீது பாலியல் சேட்டைகள் புரியப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 

இதேவேளை, மாணவர்கள் மத்தியில் வீதி விபத்துகள், போதைப்பொருள் தடுப்பு, சிறு குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டில் 215 வரையான விழிப்புணர்வு செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X