Freelancer / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா
பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலீஸாரால்
கைப்பற்றப்பட்டதோடு,கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த
சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கள்கிழமை(24)அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர்ரகவாகனத்தில்பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு
கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன்
பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150 இற்கு மேற்பட்ட
கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.
350 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய கஞ்சா, வாகனம் மற்றும் சந்தேக நபர்
ஆகியோர் கிளிநொச்சி பொலீஸாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

4 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
44 minute ago
53 minute ago