Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்டன்
யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் ஆன்மீக நிகழ்வு, இன்று ஆச்சிரம வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வரும், "சாதனைத் தமிழன்" கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நடைபெற்ற "தெய்வீக இன்னிசை" அரங்கில், ஆதித்தியா அருணகிரிநாதன் தனது தெய்வீகக் குரலில் இன்னிசை மழை பொழிந்தார்.
இந்த இசை அரங்கிற்குப் பின்வரும் கலைஞர்கள் பக்கவாத்தியம் வாசித்துச் சிறப்பித்தனர்:
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆச்சிரமத் தொண்டர்கள் மற்றும் பெருந்திரளான அடியவர்கள் கலந்துகொண்டு தெய்வீக இசையைச் செவிமடுத்தனர்.
தொடர்ச்சியாகச் சைவத்தையும் கலைகளையும் வளர்க்கும் நோக்கில் ஆச்சிரமத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வாராந்த நிகழ்வுகள் அடியவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago