2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தீ பரவலில் வீடு சேதம்

Janu   / 2026 ஜனவரி 18 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ, வீட்டில் பரவியதால்    வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள்  சனிக்கிழமை (17) அன்று வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர். 

இந்நிலையில் குறித்த தீ வீட்டின் கூரையில் பரவியுள்ளது.  இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. 

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X